இலங்கையுடன் மிகவும் வலுவான உறவில் இந்தியா : டுவிட்டரில் நரேந்திர மோடி

Published By: Robert

11 May, 2017 | 03:39 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையுடன் மிகவும்  பழையானதும்  வலுவானதுமான உறவை இந்தியா கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இலங்கை விஜயம் தொடர்பில் பதிவு செய்துள்ளார்.

டுவிட்டர் பதிவுகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு சர்வதேச வெசாக் தின நிகழ்வு மற்றும் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காகவே இலங்கைக்கு செல்கின்றேன். இலங்கை வாழ் அற்புதமான மக்களை சந்திக்க மிகவும்  ஆர்வமாக உள்ளேன்.

இந்திய பிரதமரின் இந்த பதிவில் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இது தனது இலங்கைக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மேலும் வலுவடைவதற்கு இந்த விஜயம் பெரும் உதவியாக அமையுமென்றும் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கைக்கு விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு டில்லிக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36