குஜராத் அணிக்கு எதி­ரான போட்­டியில் 2 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் டெல்லி அணி வெற்­றி­பெற்­றது. இரண்டு அணி­களும் பிளே ஓவ் சுற்­றுக்கு முன்­னே றும் வாய்ப்பை இழந்­தி­ருந்த நிலையில் நேற்­றைய போட்­டியில் மோதி­யி­ருந்­தன.

கான்­பூரில் நேற்று நடை­பெற்ற ஐ.பி.எல். தொடரின் 50ஆவது லீக் போட்­டியில் டெல்லி டேர்­டெவில்ஸ் -– குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற டெல்லி அணி முதலில் பந்­து­வீச்சை தேர்வு செய்­தது.

அதன்­படி கள­மி­றங்­கிய குஜராத் அணியின் ஆரோன் பிஞ்ச் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடியின் அதி­ர­டியால் 195 ஓட்­டங்­களைக் குவித்­தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்­க­ளாக ஸ்மித்,- இஷான் கிஷான் ஆகியோர் கள­மி­றங்­கினர். தொடக்­கத்தில் இருந்தே டெல்லி அணி பந்­து­வீச்­சா­ளர்கள் ஆதிக்கம் செலுத்­தினர். முக­மது ஷமி வீசிய 4ஆவது ஓவரில் ஸ்மித் 8 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து கள­மி­றங்­கிய அணித் தலைவர் சுரேஷ் ரெய்­னாவும் 6 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

பின்னர் இஷான் கிஷா­னுடன் - தினேஷ் கார்த்திக் நித­ான­மாக விளை­யாடி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை படிப்­ப­டி­யாக உயர்த்­தினார். குஜராத் அணியின் ஓட்ட எண்­ணிக்கை 56 என்ற நிலையில் இருந்­த­போது, அமித் மிஷ்ரா வீசிய 7ஆவது ஓவரில் இஷான் கிஷான் 34 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். 

அடுத்து கள­மி­றங்­கிய பிஞ்ச் - தினேஷ் கார்த்­திக்­குடன் ஜோடி சேர்ந்து அதி­ர­டி­யாக விளை­யா­டினர். குஜராத் அணி 17ஆவது ஓவர்களில் 148 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் 40 ஓட்­டங்­க­ளுடன் பிராத்­வெயிட் பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து ரவீந்­திர ஜடேஜா கள­மி­றங்­கினார். இதே ஓவரின் அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்சர் அடித்து அரைச் சதம் கடந்தார்.

ஆரோன் பிஞ்ச் 69 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­த­போது சமியின் பந்­து­வீச்சில் ஆட்­ட­மி­ழக்க, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 195 ஓட்­டங்­களைக் குவித்­தது. இதை­ய­டுத்து 196 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் டெல்லி அணி கள­மி­றங்­கி­யது.

டெல்லி அணியின் ஐயர் அதி­ர­டி­யாக ஆடி 96 ஓட்­டங்­களை விளாச, அவ­ருக்கு துணையாக நாயர் (30), கம்மின்ஸ் (24) ஓட்டங்களை எடுக்க 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை விளாசி வெற்றியீட்டியது.