(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாகவும் வெளி மாவட்டங்களிலிருந்து உள்நோக்கி வரும் மழைநீர் காரணமாகவும் மன்னார் பகுதியில் பல வீதிகளிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் பகுதியில் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை மேற்கு பகுதியிலுள்ள பாலியாறு பகுதியில் வீதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வீதிகளை மேவி பாய்வதால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

அத்துடன் இப் பகுதியில் வெள்ளாங்குளம் பகுதியில் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாலியாறு பெருக்கெடுப்பால் 25 குடும்பங்களில் 98 பேர் இடம்பெயர்ந்து அவர்களின் உறவினர் வீடுகளில் தங்கி வாழ்கின்றனர்.