(எம்.சி.நஜி­முதீன்)

ஐந்து அமைச்­சர்கள், இரு இரா­ஜாங்க அமைச்­சர்கள், ஆளுநர் ஒருவர் மற்றும் அதி­காரி ஒருவர் உள்­ள­டங்­க­லாக ஒன்­பது பேரின் அதி­சொ­குசு வாகன கொள்­வ­ன­விற்­காக 329 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­வ­தற்கு அர­சாங்கம் பாரா­ளு­மன்றில் மேல­திக மதிப்­பீட்­ட­றிக்கை சமர்ப்­பித்­துள்­ள­தாக முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.­பீரிஸ் தெரி­வித்தார். 

நாட்டின் பொரு­ளா­தார நிலை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாடு பொரு­ளா­தார ரீதியில் தொடர்ந்தும் பின்­ன­டை­வு­களைச் சந்­தித்து வரு­கி­றது. எனினும் அர­சாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்­தாது மக்கள் மீது சுமை களை ஏற்றி அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களின் சொகுசு வாழ்க்­கைக்கு பெருந்­தொகை நிதியை செல­வி­டு­கி­றது.

மேற்­குறிப்பிட்ட ஒன்­பது பேரில் பிர­த­மரின் பாரா­ளு­மன்ற செய­லா­ளரும் உள்­ள­டங்­கு­கிறார். குறித்த பதவி இதற்கு முன்னர் நடை­மு­றையில் இல்லை. இப்­ப­தவி புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இச்­செ­ய­லா­ளரின் வாகனக் கொள்­வ­ன­விற்­காக 430 இலட்சம் ரூபா கோரப்­பட்­டுள்­ளது. 

மேலும் இவ்­வ­ரு­டத்தில் இதற்கு முன்­னரும் சொகுசு வாகன கொள்­வ­ன­விற்­காக இரு­முறை மேல­திக மதிப்­பீட்­ட­றிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆகவே இவ்­வ­ரு­டத்தில் மாத்­திரம் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களின் சொகுசு வாகன கொள்­வ­ன­விற்­காக ஆயி­ரத்து இரு­நூறு மில்­லியன் ரூபா நிதி கோரப்­பட்­டுள்­ளது. மேலும் வரவு–செல­வுத்­திட்­டத்­திற்கு புறம்­பா­கவே சொகுசு வாகனக் கொள்­வ­ன­விற்­காக இந்­நிதி கோரப்­பட்­டுள்­ளது.

மக்­களை கருத்தில் கொள்­ளாத அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளி­னால்தான் தற்­போது அர­சாங்­கத்­திற்கு எதி­ரான செயற்­பா­டுகள் மக்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனைத் தடுக்க முடியாது. எனினும் சட்டவிரோதமான முறையில் அரசாங்கம் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முனைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.