பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீது தாக்குதல் " விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Published By: Robert

11 May, 2017 | 09:58 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிலி­யந்­தலை பகு­தியில் போதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது முன்­னெ­டுக்­கப்பட்ட தாக்­கு­த­லா­னது மிகத் திட்­ட­மிட்டு போலி­யாக தகவல் வழங்கி நடத்­தப்­பட்ட தாக்குதல் என ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் ஆலோ­ச­னை­க­ளுடன் நான்கு சிறப்பு குழுக்கள் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் தாக்குதலுக்கு பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்­கி­ளொன்று நேற்று காலை தெஹி­வளை - மஹ­ர­கம பிர­தான வீதியில் வர்த்­தக நிலையம் ஒன்றின் அருகே கைவி­டப்பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் இந்த தாக்­கு­த­லா­னது, பிர­பல போதைப் பொருள் வர்த்­தகர் ஒரு­வ­ரினால் மிகத் திட்­ட­மிட்டு நடத்­தப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் உளவுத் துறைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அத்­துடன் இந்த தாக்குதலின் பின்னணியில் தெற்கின் பிர­பல பாதாள உலகத் தலை­வனும் களுத்­துறை சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நடத்­தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்­தே­கிக்­கப்படும் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரு­மான மதூஷ் என்­ப­வரின் குழு­வி­ன­ருக்கு தொடர்பு உள்­ள­தா­கவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். இந் நிலையில் சந்­தேக நபர்­களைக் கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பிலி­யந்­தலை மொறட்­டுவ பிர­தான வீதியின் மக்கள் வங்­கிக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்­தப்பட்­டி­ருந்­தது. இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பிளான (4946) அபே­விக்­ரம உயி­ரி­ழந்தார் எனவும் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீ­வ­வுடன் பொலிஸ் கான்ஸ்­டபிள் (67055) சமிந்த காய­ம­டைந்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 இத­னை­விட காய­ம­டைந்­த­வர்­களில் 8 வய­தான சிறுமி ஒருத்­தியும் 15 வய­தான சிறுவன் ஒரு­வனும் மற்­றொரு சிவி­லி­யனும் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ள நிலையில் 8 வயது சிறு­மியின் நிலைமை கவலைக் கிட­மாக உள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

சுமார் 10 கிலோ வரை­யி­லான போதைப் பொருள் வர்த்­தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இந் நிலையில் அது தொடர்பில் உடன் செயற்­பட்­டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் ஆலோ­ச­னையைப் பெற்று செயற்­பட்­டுள்­ளது. அதன்­படி அது தொடர்­பி­லான சுற்­றி­வ­ளைப்­புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மையில் குழு­வொன்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இருந்து அனுப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் இக்­கு­ழு­வா­னது சுற்­றி­வ­ளைப்­புக்­காக பிலி­யந்­த­லையை அண்மித்த போது, பிலி­யந்­தலை மக்கள் வங்­கியை அண்­மித்து நடு வீதியில் வைத்து துப்­பாக்கிச் சூடு நடத்­தப்பட்­டுள்­ளது. பொலிஸ் அதி­கா­ரிகள் பய­ணித்த வாக­னத்தை முந்திச் செல்­வது போன்று வந்­துள்ள மோட்டார் சைக்­கிள்­களில் வந்­துள்ள பாதாள உலகக் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள் , பொலி­ஸாரின் வாகனம் மீது சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­யுள்­ளனர்.

இதன் போது பொலிஸ் ஜீப் வண்­டியை செலுத்திச் சென்­ற­தாக நம்­பப்­படும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே உயி­ரி­ழந்­துள்ளார். ஜீப்­பி­லி­ருந்த ஏனையோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதனை விட இந்த துப்­ப­க்கிச் சூடு நடத்­தப்­படும் போது அப்­ப­கு­தியில் இருந்த வர்த்­தக நிலையம் ஒன்றும் துப்­பாக்கிச் சன்­னங்­களால் துளைக்­கப்பட்­டுள்­ளது. இதன் போதே அந்த வர்த்­தக நிலையம் அருகே இருந்த இரு சிறுவர்­களும் மற்றைய சிவி­லி­யனும் காய­ம­டைந்­துள்­ளனர். 

இத­னை­விட பொலிஸ் ஜீப் வண்­டிக்கு மேல­தி­க­மாக அப்­ப­கு­தியில் இருந்த மேலும் மூன்று வாக­னங்­களும் துப்பாக்கிப் பிர­யோ­கத்தில் சேத­ம­டைந்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்­டினை அடுத்து உட­ன­டி­யாக பாதாள உலக உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்­றுள்ள நிலையில், காய­ம­டைந்தவர்கள் முதலில் பிலி­யந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான, குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்களைக் கையாளும்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் நான்கு சிறப்பு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21