நரேந்திர மோடியின் மலையக விஜயம் : இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிலைமைகளை ஆராய ஹட்டன் விஜயம்

Published By: Robert

10 May, 2017 | 02:24 PM
image

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 12ம் திகதி மலையகத்திற்கு இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காகவும், இந்திய உயர்ஸ்தானிகர் த ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இன்று காலை 11.00 மணியளவில் இந்திய உலங்கு வானூர்தி மூலம் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இவர்களை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், பிலிப்குமார் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் வரவேற்றனர்.

அத்தோடு இந்திய உயர்ஸ்தானிகருடன், இந்திய பொலிஸ் பாதுகாப்பு துறையின் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதியூயர் பாதுகாப்பு குழுவினர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்று அங்கு நரேந்திர மோடியினை வரவேற்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பாதுகாப்பு நிலவரங்கள் போன்றன அவதானித்தனர். இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரக உதவி தூதுவர் ஏ.நடராஜன் கலந்துக் கொண்டார்.

அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் பொது மக்களை சந்திக்கவுள்ள நோர்வூட் விளையாட்டு மைதானத்தினையும் பார்வையிட்டு அங்குள்ள நிலவரங்களையும் ஆராய்ந்தனர்.

150 கட்டல்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இக்கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா வைத்தியசாலையின் பதிய கட்டடம் எதிர்வரும் 12 திகதி இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53