அமைச்­ச­ரவையில் விரைவில் மாற்றம்.?­

Published By: Robert

10 May, 2017 | 09:43 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

Image result for மஹிந்த அம­ர­வீர  virakesari

புதிய அர­சி­ய­ல­மைப்பு, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­கான எவ்­வி­த­மான சிறி­த­ள­வான  வாய்ப்பும் தற்­போ­தைக்கு இல்லை. ஆனால், அமைச்­ச­ர­வையில் மாற்றம் எப்­போது வேண்­டு­மா­னாலும் வரலாம். அதை­விட தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஒய்­வின்றி உழைத்து வரு­கின்­றது என ஐக்­கிய மக்கள்  சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொது செய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். 

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை மீண்டும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் முழு­மை­யாக ஈடு­பட்­டுள்ளோம். அதே போன்று சுதந்­திர கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு பணி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றக. இவை அனைத்தும் உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலை எதிர் கொள்ளும் நோக்­கி­லேயே இடம்­பெ­று­கின்­றக. இதற்கு அமை­வாக அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்ள மத்­திய செயற்­கு­ழுவில் பல முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட உள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு கையி­லேயே அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் தேவை என்­பதே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நிலைப்­பாடே தவிர , புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்ல . எனவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை  நடத்­து­வது தொடர்பில் எவ்­வி­த­மான பேச்­சுக்­களும் இது­வ­ரையில் கட்­சிக்குள் எடுக்­கப்­பட வில்லை. 2020 இல் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு தேவை­யான வியூ­கங்­க­ளையே தற்­போது தயார்ப்­ப­டுத்தி வரு­கின்றோம். அத­ன­டிப்­ப­டையில் அடுத்து வர­வுள்ள உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்­தலை கருத்தில் கொண்டு அனைத்து ஏற்­பா­டு­களும் இடம்­பெ­று­கின்­றன. 

அதே போன்று அமைச்­ச­ர­வையில் மாற்றம் கொண்டு வரு­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னங்­க­ளுக்கு வந்­துள்­ளனர். பிர­தமர் இதற்கு எதிர்ப்பு என்ற கருத்தில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை. குறிப்­பிட்ட சில துறை­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் . ஆனால் எப்­போது மாற்றம் ஏற்­படும் என கூற இய­லாது . எப்­போதும்  ஏற்­ப­டாலாம் என்­பதே உண்­மை­யகும். 

தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கை­களை முன்­னெ­டுத்து செயற்­பட வேண்­டிய தேவை எமக்­குள்­ளது. எனவே ஒய்­வின்றி  உழைக்­கின்ற நிலையே சுதந்­திர கட்­சிக்கு தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பினை மேலும் வலுப்­ப­டுத்தி செயற்­திறன் மிக்­க­தாக்கும் நட­வ­டிக்­கை­களில் முழு­மை­யாக ஈடுப்­பட்­டுள்ளோம். இதற்கு அமை­வாக கூட்டு எதி­ர­ணியில் உள்­ள­வர்­களும் இணைந்து கொள்­வார்கள். சில சந்­தர்ப்­பங்­களில் ஜீ.எல்.பீரிசின் கட்­சியில் உள்­ள­வர்கள் தனித்து செயற்­பட வாய்ப்­புள்­ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஜாத­கத்தில் தற்­போது சிறந்த கால­மாக காணப்­ப­டு­கின்­றது. 

இதனை ஒரு பெரிய சவா­லாக  எடுத்துக் கொள்ள வேண்­டி­ய­தில்லை. மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு பாது­காப்பு குறைக்­கப்­பட்­ட­தாக கூறு­கின்­றனர். புலி­களின் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு ஒரு கண் பாதிக்கப்பட்டு போனது. ஆனால் அவர் பாதுகாப்பு கேட்டு அடம்பிடிக்க வில்லை. தேசிய புலனாய்வு பிரிவின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே  தனிநபர் பாதுகாப்பு குறித்து தீர்மானிக்கப்படும் . இதில் எமக்கு எவ்விதமான பங்கும். இல்லை. தேவை எனில் இன்னும் பாதுகாப்பு தரலாம் என்றார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43