முப்பது வருடங்களுக்குப் பின் மீண்ட கடற்கரை!

Published By: Devika

09 May, 2017 | 12:56 PM
image

முப்பது வருடங்களுக்கு முன் கடலால் கபளீகரம் செய்யப்பட்ட கடற்கரையொன்று மீண்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது.

அயர்லாந்தின் ‘அச்சில்’ தீவுகளுக்குச் சொந்தமான இந்தக் கடற்கரை 300 மீற்றர் நீளமுள்ளது. இங்கே நான்கு ஹோட்டல்களும் பல விருந்தினர் விடுதிகளும் இருந்தன. இக்கடற்கரையை நம்பி சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

1984ஆம் ஆண்டு இத்தீவுப் பகுதியில் வீசிய கடும் புயலால், இந்தக் கடற்கரையில் இருந்த மண் முழுவதுமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. மண் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதால், அதன் கீழே இருந்த சிறியதும் பெரியதுமான கருங்கற்பாறைகள் மட்டுமே எஞ்சின.

இந்நிலையில், கடந்த மாதத்தின் அனேக நாட்கள் இப்பகுதியில் பேரலைகள் வீசியதால், மண் மீண்டும் கரையில் சேர்ந்தது. இதனால், மீண்டும் இப்பகுதி கடற்கரையாகக் காட்சி தருகிறது.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமது கடற்கரை கிடைத்தது குறித்து அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right