மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. 

Image result for மிக் விமானக் கொள்­வ­னவு

தனது வங்­கிக்­க­ணக்­குகள்  முடக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரா­கவும் கோட்டை நீதி­வா­னினால் தனக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­வி­றாந்து ஊடா­கவும் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து உத­யங்க வீர­துங்க சார்பில்  தாக் கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மனு மீதான விசா­ரணை நேற்று இடம்­பெற்ற போதே மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட இதனை நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

குறித்த வழக்கு நேற்று  விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது, இந்த வங்கிக் கணக்கு தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக, மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொட சுட்­டிக்­காட்­டினார்.

சம்­பந்­தப்­பட்ட விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து, நீதி­மன்­றத்தில் தக­வ­ல­ளிக்கும் வரை கால அவ­காசம் வழங்­கு­மாறும், அவர் இதன்­போது அவர் கோரி­யி­ருந்தார். 

முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்த புவ­னேக அளு­வி­ஹார, உபாலி அபே­ரத்ன, அணில் குண­ரத்ன ஆகிய நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய மூவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் வழக்கு விசா­ர­ணையை ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது. 

மேலும், அன்­றை­ய­தினம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.