புனர்­வாழ்­வ­ளிக்­கப்­ப­டாமல் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலி­க­ளினால் எனக்கு உயி­ரா­பத்து : மஹிந்த

Published By: Robert

09 May, 2017 | 10:56 AM
image

தற்­போதைய அர­சாங்­கத்­தினால் விடு­விக்­கப்­பட்ட புனர்­வாழ்­வ­ளிக்­கப்­படாத விடு­தலை புலி­க­ளி­னா­லேயே தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பாதுகாப்புச் செயற்பாடுகளை அவரின் வீட்டிற்கே சென்று கோத்தபாய ராஜபக் ஷ சீர் செய்து கொடுத்தாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஊட­கப்­பி­ரிவு விடுத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பை குறைக்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உயர் நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்த­தாக அர­சாங்க தரப்பு அர­சியல் வாதிகள் சிலரால் பரப்­பப்படும் கருத்­துக்கள் முற்­றிலும் பொய்­யா­னவை.

இவை வெறும் பிர­பல்­யத்­திற்­கான பிர­சாரம் மட்­டு­மே­யாகும். எந்த ஒரு மனுவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வி­னாலோ அல்­லது ஜனா­தி­பதி செய­லா­ளரி­னாலோ அல்­லது பாது­காப்பு செய­லா­ள­ரி­னா­லேயோ தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை.

இது அர­ச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்­றினால் தாக்கல் செய்­யப்­பட்­ட தனிப்­பட்ட மனு­வாகும். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க பண்­டா­ர­நா­யக்க தனது பாது­காப்பு தொடர்பில் கவ­ன­மெ­டுக்­கு­மாறு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் கேட்­ட­ போது அவர் அவ­ரது வீட்­டிற்கே சென்று அவ­ரது சிரேஷ்ட பாது­காப்பு அலு­வ­லர்­களை சந்­தித்து பாது­காப்பு வச­தி­களை சரி­ செய்­து­விட்டு வந்தார்.

அவ­ரது பாது­காப்பு ஒழுங்­கு ­மு­றை­களில் எவ்­வி­த­மான மாற்­றங்­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான கோரிக்­கைகள் பல தட­வைகள் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் சிரேஷ்ட பாதுகாப்பு அலு­வ­ல­ரினால் விடுக்­கப்­பட்ட போதும் நாம் அதனை உறுதி செய்தோம். 

சில அர­சியல் வாதிகள் தமது விம்­பத்­துக்கு பொருத்­த­மான வகையில் மக்­க­ளிடம் கருத்­து­களை பரப்பி வரு­கின்­றார்கள். அது அவர்­களின் சொந்த நியா­யப்­பா­டு­க­ளாகும். இந்த அர­சாங்­கத்­திலும் கூட பல தட­வைகள் புலி­களின் சதி முயற்­சிகள் அரங்­கேறி­யுள்­ளன. உதா­ர­ண­மாக இவ்­வ­ரு­டத்தின் ஆரம்­பத்தில் புலம்­பெயர் உறுப்­பினர் ஒருவர் தமி­ழ­ரசுக் கட்­சியின் பிர­தான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை தாக்க முற்­பட்­டி­ருந்தார்.

அது­ம­­ட்டு­மல்­லாது இரண்டு கிளைமோர் குண்­டு­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இது­போன்ற விடு­தலை புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இந்த அர­சாங்­கத்­திலும் தொடர்­கின்­றன. ஆனால் எனது அர­சாங்­கத்தில் 11 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட விடு­தலை புலி­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.

ஒரு சிலரை மட்­டுமே எம்மால் புனர்­வாழ்­வுக்­குட்­ப­டுத்த முடி­யாமல் போனது. அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களினாலேயே எனது அச்சுறுத்தல் ஏற்படும்.

அந்த வகையில் 30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையிலும் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்தவர் என்ற வகையில் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19