முள்ளி வாய்க்கால் நினைவுதினத்தில் ஜனாதிபதி வந்தால் எதிர்ப்போம் : போராட்டம் நடக்கும் என்கிறார் சிவாஜிலிங்கம்

Published By: Robert

09 May, 2017 | 10:46 AM
image

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்­கொண்ட இன அழிப்பை முள்­ளி­வாய்க்கால் துக்க நினைவு வார­மாக அனுஷ்­டிக்க அனை­வரும் முன்­வர வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்ள வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான எம்.கே.சிவா­ஜி­லிங்கம், முள்­ளி­வாய்க்­காலின் இறுதி நாள் நினைவு தினம் அன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முல்­லைத்­தீ­விற்கு வரு­வ­தனை தவிர்க்க வேண்டும். அவ்­வாறு மீறியும் வருகை தந்தால் அவரை வெளி­யேறக் கோரி முல்­லைத்­தீவில் பெரும் போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

யாழ்.ஊடக அமை­யத்தில் வடக்கு மாகாண சபையின் வவு­னியா மாவட்ட உறுப்­பி­ன­ரான தியா­க­ராஜா, கிளி­நொச்சி மாவட்ட உறுப்­பி­ன­ரான பசு­ப­திப்­பிள்ளை, ஆகி­யோ­ருடன் இணைந்து சிவா­ஜி­லிங்கம் பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­போன்றை நேற்­றைய தினம் பிற்­பகல் இரண்டு மணி­ய­ள வில் நடத்­தி­யி­ருந்தார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெர­ிவித்­தி­ருந்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­பதா வது,

இலங்கை அர­சாலும் அதன் படை­க­ளாலும் தமிழ் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட இனப்­ப­டு­கொலை நினைவு தின­மாக முள்­ளி­வாய்க்கால் நினைவு வாரம் வருடம் தோறும்,மேமாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை உல­கத்­த­மி­ழர்­களால் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. அனைத்து உலக தமி­ழர்­களின் துக்க நாளாக இருக்கும் இந்த நினைவு வாரத்தை அனுஷ்­டிப்­ப­தற்கு வட க்கு மாகாண சபை இந்த முறையும் தீர்­மா­னித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் முள்­ளி­வாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளான எதிர்­வரும் 12 ஆம் திகதி, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­வினால் அரங்­கேற்­றப்­பட்ட செம்­மணி படு­கொலை நடை­பெற்ற இடத்தில் நினை­வஞ்­ச­லிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

13 ஆம் திகதி கிழக்கு மாகா­ணத்­திலும், 14 ஆம் திகதி ஈழத்­த­மி­ழர்­களின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த வட்­டுக்­கோட்டை தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்ட இடத்­திலும், அதே நாளன்று நவாலி சென் பீற்றர் தேவா­ல­யத்தில் நடை­பெற்ற படு­கொ­லையை நினைவு கூரும் வகை­யிலும் அஞ்­சலி நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. 15 ஆம் திகதி குழந்­தைகள் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட குமு­தினி படு­கொலை நினைவு தூபி­யிலும், 16 ஆம் திகதி வவு­னி­யா­விலும், கிளி­நொச்­சியிலும், 17 ஆம் திகதி மன்­னா­ரிலும், இறுதி நாளான 18 ஆம் திகதி அன்று முள்­ளி­வாய்க்­காலில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­னேஸ்­வரன் தலை­மையில் நினைவு தின நிகழ்­வு கள் நடை­பெ­ற­வுள்­ளன. 

இந்த நினைவு நிகழ்வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களும் அர­சியல் கட்சி பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இந்த நிகழ்வில் அர­சியல் வேறு­பா­டின்றி அனைவரும் கலந்து கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன நினைவு தின நிகழ்வை ஒன்றாக நின்று நடத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரி க்கை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55