அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்.தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் பங்குபற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழமைபோல் 8 அணிகள் பங்கேற்குமா? அல்லது 10 அணிகள் பங்கேற்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தோன்றியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.பி.எல். தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா, குஜராத் மற்றும் பூனே அணிகளுக்கு 2 ஆண்டுகள் மாத்திரம் விளையாடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கான ஒப்பந்தம் நீடிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.பி.எல். தொடரில் 8 அணிகளா? 10 அணிகளா? என்ற கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து வரும் ஆட்சிமன்றக் குழுவில் நாங்கள் விவாதம் நடத்துவோம். இதுவரை நாங்கள் 8 அணிகள் என்ற முடிவிலேயே சென்று கொண்டிருக்கிறோம். குஜராத் மற்றும் பூனே அணிகளுக்கு நீட்டிப்பு கொடுக்கவில்லை. ஏனென்றால் அவர்களுடன் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.