ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சுனில் நரைன் ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக அரைச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன், 4 ஆறு ஓட்டங்களையும், 6 நான்கு ஓட்டங்களையும் விளாசியுள்ளார்.

பந்துவீச்சளரான நரைன் அதிவேகமாக அரைச்சதம் கடந்துள்ளமை இரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் யூசுப் பத்தான் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைச்சதம் கடந்திருந்தமையே வேகமான அரைச்சதமாக காணப்பட்டது.

இதேவேளை இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.