சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன.

குறித்த கண்காட்சியின் போது யுத்த கப்பல் தொடர்பான சர்வதேச கடல் பாதுகாப்பு சர்வதேச கடல் பொறியியலாளர் மாநாடு இடம்பெறவுள்ளமையினால், அதில் பங்குகொள்வதற்காக 34 அதிகாரிகளும், 290 கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். 

மேலும் நேற்று கொழும்பிலிருந்து சென்றுள்ள குறித்த கப்பல்களானது எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.