கம்பளை கங்கவட்ட பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை மற்றும் இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழந்தை சற்றுமுன்னர் மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

2 வயது மற்றும் 8 மாதங்களான குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடத்தப்பட்ட இளைஞர் (26) கண்டியில் வைத்து இன்று காலை கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.