இலங்கையில், புதிய நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணத் தொகை 73 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணத் தொகை 15 ஆயிரம் ரூபாவில் இருந்து நான்காயிரம் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு புதிதாகப் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது. இதனால், வியாபாரப் பதிவுகள் மூலமான வருவாயும் அதிகரித்தது.

2015ஆம் ஆண்டு 632 மில்லியன் ரூபாவாக இருந்த இந்தத் தொகை, கடந்த வருடம் ஏறக்குறைய இரண்டு மடங்காகி 1.78 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.