காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை : உறவினர்கள் குற்றச்சாட்டு

Published By: Ponmalar

05 May, 2017 | 02:15 PM
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி 75 நாளை எட்டியுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

75 நாட்களாக இரவு பகலாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது எங்களால் தெரவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் மஹிந்த வந்துவிடுவார் என்றும், அரசு பதில் தரும் என்றும், சர்வதேசம் உதவி செய்யும் என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வவொரு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

ஒரு நாளைக்கு என்றாலும் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக கொழும்பில் ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையை செய்ய முடியாத நிலையிலேயே எங்களது பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். இணக்க அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள் இன்று சரணாகதி அரசியலில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் ஒரு பேச்சும், கொழும்பில் ஒரு பேச்சும், வெளிநாடுகளில் ஒரு பேச்சும் என அவர்களது செயற்பாடுகள் தொடர்கிறது எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்குவதனைவிடுத்து மக்களின் பிரச்சினைகளை  தீர்க்கும் வகையில் அரசுக்கு உரிய அழுத்தத்தை வழங்குமாறு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளிடமும் 75வது நாளில் கோரிக்கையாக முன்வைப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56