முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சி விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறி முறைப்பாட்டு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.  

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்களுக்கெதிராக முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.