தனது தந்­தையின் கடையில் மேசையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைத் துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 3 வயது சிறுவன் ஒருவன் தவ­று­த­லாக தன்னைத் தானே சுட்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க வட கரோ­லினா பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

லும்­பெர்டன் நக­ரி­லுள்ள கடையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­க­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளியிட்­டுள்­ளன.

சம்­பவ தினம் சிறு­வ­னது தந்­தை­யான மனல் அப்­டெல்­லாஸிஸ் அவனை அழைத்துக் கொண்டு தனது கடைக்கு வந்­துள்ளார். இந்­நி­லையில் கடைக்கு வந்த வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருடன் மனல் அப்­டெல்­லாஸிஸ் உரை­யாடிக் கொண்­டி­ருந்த வேளை சிறுவன் மேசையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த துப்­பாக்­கியை எவ்­வாறோ எடுத்­துள்ளான்.

அந்தத் துப்­பாக்­கி­யா­னது அந்தக் கடையில் கடமையாற்றிய அடியா பெகைஸ் என்ற பெண் ஊழியருக்கு உரியதாகும்.