அமெ­ரிக்க ஜன­நா­யக கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளின்­ட­னுக்கு பாது­காப்பை வழங்கும் அணியில் அங்கம் வகித்த வேளை உடல் செய­லி­ழப்­புக்­குள்­ளான அந்­நாட்டு இர­க­சிய சேவை முகவர் ஒருவர், மருத்­து­வ­ம­னையில் அவ­சர சிகிச்சைப் பிரி­வி­லுள்ள தனது படுக்­கையில் இருந்­த­வாறு தனது மனம் கவர்ந்த காத­லியை திரு­மணம் செய்­துள்ளார்.

கடந்த சனிக்­கி­ழமை மஸா­சுஸெட்ஸ் பொது மருத்­து­வ­ம­னையில் இடம்­பெற்ற இந்த மனதை நெகிழ வைக்கும் திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

கேரெத் பிட்ஸ்­ஜெரால்ட் (30 வயது) என்ற மேற்­படி இர­க­சிய சேவை உத்­தி­யோ­கத்தர் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி நியூ­ஹம்­ஷி­யரில் இடம்­பெற்ற வாகன விபத்தில் படு­கா­ய­ம­டைந்து உடல் செய­லி­ழப்­புக்கு உள்­ளானார்.

இதன்­போது அவ­ரது கார் மீது எதிர்த்­தி­சை­யி­லி­ருந்து வந்த சாரதி அனு­ம­திப்­பத்­திரம் பெறாத சார­தி­யொ­ரு­வரால் செலுத்­தப்­பட்ட கார் மோதி­யுள்­ளது.

இந்த விபத்தால் முள்­ளந்­தண்டில் கடும் காயத்­துக்கு உள்­ளான கேரெத்­துக்கு அவ­ரது உடலில் தோள்­க­ளுக்கு கீழான பகுதி செய­லி­ழந்­தது.

அவ­ருக்கும் அவரை கடந்த 9 வருட கால­மாக காத­லித்து வந்த அவ­ரது காதலி ஜோன் லையோ­லுக்கும் (28 வயது) எதிர்­வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி திரு­மணத்திற்கு ஏற்­பா­டா­கி­யி­ருந்த நிலையில் இடம்­பெற்ற இந்த விபத்தால் இரு­வ­ருமே பெரிதும் அதிர்ச்­சிக்­குள்­ளா­னார்கள்.

இந்­நி­லையில் இந்த விபத்தால் தொடர்ந்து மருத்­து­வ­ம­னையில் தங்­கி­யி­ருந்து தீவிர சிகிச்­சையை கேரெத் பெற வேண்­டி­யி­ருந்­ததால், எதிர் ­வரும் மார்ச் மாதம் திட்­ட­மிட்­ட­வாறு திரு­மண த்தை நடத்த முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டுள்ளது.

இந்­நி­லையில் திரு­ம­ணத்தை தாம­திக்­காது முன்­கூட்­டியே செய்து கொள்ள அந்த ஜோடி தீர்­மா­னித்­தது.

இத­னை­ய­டுத்து மருத்­து­வ­மனை நிர்­வா­கத்தின் அனு­ம­தி­யுடன் கடந்த சனிக்­கி­ழமை மருத்­து­வ ­ம­னையில் இடம்­பெற்ற திருமணத்தில் நெருங்­கிய உற­வி­னர்­களும் நண்பர்களும் கலந்து கொண்ட னர்.

மேற்படி திருமணம் தொடர்பில் லையோல் விபரிக்கையில், தனது காதலரான கேரெத்தை திருமணம் செய்ய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாக கூறினார்.