தனது தந்­தையால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட 13 வயது சிறு­மி­யொ­ருவர் 36 ஆவது மாடி­யி­லுள்ள குடி­யி­ருப்­பொன்­றி­லி­ருந்து குதித்து தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஷாங்ஸி மாகா­ணத்தில் சாங்ஸி எனும் இடத்தைச் சேர்ந்த குவோ என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் குறிப்­பிட்ட சிறுமி, தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு முன் எழுதி வைத்­தி­ருந்த துண்டுக் குறிப்­புகள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அதில் ஒரு துண்டுக் குறிப்பில், "நான் விப­ரிக்க வேண்­டி­ய­தல்­லாத பல விட­யங்கள் உள்­ளன. நான் இந்த இர­க­சி­யங்­களை நீங்கள் அறிந்து கொள்ள அனு­ம­திக்கப்போவ­தில்லை. நான் மிகவும் வேதனை அடைந்­துள்ளேன்” என குவோ தெரி­வித்­துள்ளார்.

அதே­ச­மயம், பிறி­தொரு துண்டுக் குறிப் பில், "மரணம் இன்­னொரு ஆரம்­ப­மாகும். வேத­னையை மறக்க அது அவ­சி­ய­மா­க­வுள்­ளது” என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்த சிறு­மியின் பெற்றோர் விவா­க­ரத்துப் பெற்ற நிலையில் அவர் தனது அத்­தை­யொ­ரு­வ­ருடன் வசித்து வந்த­தா­கவும் இதன்­போதே அவர் தனது தந்­தையால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. சிறுமி அவ­ரது தந்­தையால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சமயம் அவ­ரது அத்தை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­த­துடன் சிறு­மியை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் அந்த சிறுமி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­ மைக்­கான சான்­று­களை சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையில் சிறு­மி­யிடம் தீவிர விசா­ர­ணை­களை மேற்கொண்டதால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை முடிவை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் மரணத்தையடுத்து அவரது தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ள னர்.