இரண்டரை வயது குழந்தையுடன் 26 வயதுடைய இளைஞனும் காணாமல் போன சம்பவம் கம்பளை கங்கவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை குறித்த இளைஞனும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

தான் வேலை செய்யும் இடத்துக்கு மதிய உணவை கொண்டு வரும்போதே இவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.