தாய்­வானைச் சேர்ந்த அதி­கா­ரிகள் பெண்­களை வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு கவர்ந்­தி­ழுக்கும் முக­மாக பெண்கள் அணி­வ­தை­யொத்த குதிக்கால் பாதணி வடிவில் தேவா­ல­ய­மொன்றை வடி­வ­மைத்துள்ளனர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை நிர்­மாண நட­வ­டிக்­கைகள் பூர்த்தி செய்­யப்­பட்ட இந்த தேவா­லயம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஜெய்யி பிராந்­தி­யத்தில் தென்­மேற்கு நஷனல் செயினிக் கடற்­கரை பிர­தே­சத்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள இந்த 55 அடி உய­ரமும் 36 அடி அக­லமும் கொண்ட தேவா­லயம் 320 பாரிய கண்­ணா­டி­களால் வடி­வமைக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தேவா­ல­யத்தை எதிர்­வரும் பெப்­ர­வரி 8 ஆம் திகதி இடம்­பெ­றவுள்ள சீனப் புதுவரு­டத்­தை­யொட்டி திறந்து வைக்க திட்டமிடப்பட் டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரி விக்கிறனர்.