தூக்குபாலம் வழியாக அந்தமான் சென்ற கப்பல் கரை தட்டியது : மீனவர்களின் உதவியால்  தப்பியது இரயில் பாலம் (காணொளி)

Published By: Priyatharshan

04 May, 2017 | 10:58 AM
image

 பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயன்ற கப்பல் தரை தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது மீனவர்களின் உதவியால் ரயில் பாலம் தப்பியது.
கோவா துறைமுகத்திலிருந்து புதிய கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக கடந்து செல்ல நேற்றுமுன்தினம்  பாம்பன் துறைமுகத்திற்கு வந்தன.நேற்று பகல் ஒரு மணியளவில் தூக்குபாலம்வழியாக கடக்க முயன்ற கப்பலொன்று வழித்தடம் மாறி  திடீரென தூக்குபாலத்திற்கு 50 அடி தூரத்தில் தரை தட்டி நின்றது.இதனையடுத்து பாம்பன் மீனவர்களின் உதவியோடு சுமார் ஒரு மணி நேரம் போராடி தரை தட்டிய கப்பலை மீனவர்கள் மீட்டனர். இதனையடுத்து கப்பல் இரண்டு மணி நேர காலதாமததுடன் புறப்பட்டுச் சென்றது இதனையடுத்து சரக்கு கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.காற்றின் வேகம் குறைவாக இருந்ததாலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததாலும் உடனடியாக மீனவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் இரயில் பாலம் பாதுகாக்கப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் கருத்து தெரிவத்துள்ளனர் இது குறித்து துறைமுக அதிகாரியை தொடர்புகொள்ள முடியவில்லை.
பாம்பன் பகுதியல் தூக்குபாலம் வழியாக அந்தமான் செல்ல முயன்ற கப்பல் தரை தட்டி நின்றது. மீனவர்களின் உதவியோடு அது மீட்கப்பட்டு கடந்து சென்றது. காற்றின் வேகம் குறைவாக இருந்ததால் இரயில் பாலத்தில் மோதாமல் தப்பியது. முறையான வழிகாட்டுதல் இன்றி இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்பன் வாராவதி ஆற்றுப்பகுதியை ஆழப்படுத்த வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆகவே ஆழப்படுத்தினால் மீன்பிடி படகுகள் செல்லுவதற்கு வசதியாகவும் கப்பல்கள் கடந்து செல்லும் போது  இவ்வாறான ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படாதென நாட்டுப்படகு மீனவர்சங்கத் தலைவர் அருள்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52