ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை

Published By: Raam

13 Jan, 2016 | 08:22 AM
image

ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யதை எதிர்த்து தொட­ரப்­பட்ட 13 மனுக்கள் மீதான விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து நேற்று ஜல்­லிக்­கட்­டுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் இடைக்காலத்தடை விதித்­தது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் நேற்று போராட்டங்கள் வெடித்ததோடு அலங்காநல்லூரில் இரு இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.

பொங்­கலை முன்­னிட்டு ஜல்­லிக்­கட்டு நடத்­து­வ­தற்­கான அனு­ம­தியை மத்­திய அரசு கடந்த வெள்ளிக்­கி­ழமை வழங்­கி­யது. இதனை எதிர்த்து விலங்­குகள் நல­வா­ரியம் உள்­ளிட்ட தரப்­பினர் சார்பில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்த 13 மனுக்கள் மீதான விசா­ரணை நீதி­பதி தாக்கூர் தலை­மை­யி­லான அமர்­வி­லி­ருந்து நீதி­ப­திகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்­வுக்கு மாற்­றப்­பட்டு நேற்று விசா­ரணை நடை­பெற்­றது.

விலங்­குகள் நல­வா­ரியம் சார்­பாக வழக்­க­றிஞர் அரிமா சுந்­தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், ஜல்­லிக்­கட்­டுக்கு தடை விதித்து ஏற்­க­னவே உள்ள அறிக்­கையை மீற முடி­யாது. புதிய அறிக்­கையில் ஜல்­லிக்­கட்­டுக்கு அனு­மதி வழங்க புதிய அம்­சத்தை சேர்த்­தது சரி­யல்ல என்று கூறினார். மத்­திய அரசு சார்பில் அட்­டர்னி ஜெனரல் முகுல் ரோஹக்கி ஆஜ­ராகி வாதா­டினார்.

புதிய அறிக்­கையில் காளை­கள் வதை தொடர்­பாக கவ­னத்தில் கொண்­டுள்ளோம் என்று அவர் தெரி­வித்தார். மேலும் ஜல்­லிக்­கட்­டுக்கு தேவை­யெனில் உச்­ச­நீ­தி­மன்றம் நிபந்­தனை விதிக்­கலாம் என்றும் அவர் கூறினார். தமி­ழக அரசு சார்பில் ராஜேஸ்­வர ராவ், சேகர் நாப்டே ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

அனைத்து தரப்பு வாதங்­க­ளையும் கேட்ட நீதி­ப­திகள் ஜல்­லிக்­கட்டு போட்­டிக்கு இடைக்­கால தடை விதித்து உத்­த­ர­விட்­டனர். அனு­ம­தியளித்த மத்­திய அரசின் அறிக்­கைக்கு இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக, "காட்­சிப்­ப­டுத்­தப்­படும் விலங்­குகள்" பட்­டி­யலில் உள்ள காளையை நிபந்­த­னை­யுடன் ஜல்­லிக்­கட்டு போட்­டியில் ஈடு­ப­டுத்த வகை செய்யும் அர­சா­ணையை மத்­திய அரசு கடந்த 8 ஆம் திகதி வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொங்­க­லுக்கு இன்னும் சில நாட்­களே உள்ள நிலையில் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் இந்த உத்­த­ரவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10