நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது

Published By: Robert

04 May, 2017 | 09:48 AM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்ய போகின்­றனர்? அவர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பார பண்ட அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. விசேட வியா­பார பண்ட அற­வீடு மூலம் பேரீச்­ச­ம்ப­ழத்­திற்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­காயம், உருளைக் கிழங்கு இறக்­கு­மதி உணவு வகையில் அதி­க­ரிப்­பதன் ஊடாக பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலாபம் பெறு­வார்கள் என கூற­மு­டியும். எனினும் பேரீச்­ச­ம்பழ வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயி­ரி­டப்­ப­டு­கின்­றதா? பேரீச்­ச­ம்பழ பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலங்­கையில் உள்­ள­னரா?  இல்லை; நோன்­பா­ளிகளை வைத்து அர­சாங்கம் தனக்கு இலாபம் ஈட்­டவே முயற்­சிக்­கி­றது. இது பெரும் அநி­யா­ய­மாகும்.

எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப்போகின்­றனர்? பெரி­தாக தம்மை முஸ்லிம் தலை­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வர்கள் என்ன பதில் வழங்க போகின்­றனர்? 

அத்­துடன் சீனா­வுடன் இம்­மாதம் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­ததை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இதனால் இலங்­கையின் உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­ப­டுவர். சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்­ஷ­லினால் கூட ஒன்றும் செய்ய முடி­யாது. தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என கேள்வி எழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32