அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர்

03 May, 2017 | 07:51 PM
image

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உதய கம்மன்பில எம்.பி கேள்வி எழுப்பும் போது,

அண்மையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்ற போது இந்தியா அரசாங்கத்துடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? திருகோணமலை எண்ணெய் தாங்கி குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இந்தியா சென்ற போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக எல்.என்.ஜி மின் நிலையங்கள் இரண்டு இலங்கையில் நிறுவதற்கும், திருகோணமலை, மன்னார், தம்புள்ளை பிரதேசத்தில் அதிவேக பாதைகளை நிர்மாணித்தல் மற்றும் திருணோமலை துறைமுகத்தை கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

அத்துடன் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை குத்தகையின் அடிப்படையில் இந்திய நிறுவனத்திற்கு வழங்கி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டு பங்காண்மையின் கீழ் குறித்த தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போதைக்கு 2003 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு இலட்சம் டொலர் வருடாந்தம் வருமானமாக கிடைக்கபெறுகின்றது.

எனவே இந்த விடயம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது. எனினும் இது தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. 

அத்துடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்வது நாடுகளுடன் அல்ல. ஒரு நாட்டின் அரசுக்கு குத்தகைக்கு விடுவதில்லை. அந்நாட்டின் நிறுவனத்திற்கே நாம் குத்தகைக்கு விடவுள்ளோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனா நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தார். அதுபோன்றே நாம் இந்தியா ,சீனா என அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்து அந்நாடுகளின் முதலீடுகளை இலங்கைக்கு பெறவுள்ளோம். 

இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட சீன, இந்திய நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன. 

எனவே அதே‍ நடவடிக்கைகை நாம் ஆரம்பித்துள்ளோம். இலங்கையும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற வேண்டுமாயின், அதிகளவில் முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கபெற வேண்டும். அதற்கு பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும். 

எனினும் இவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55