(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மிகவும் சோர்வடைந்த நிலையில் இன்று காலை அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் திருக்கோவிலைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் கிரானைச் சேர்ந்த யோகராசா ஆகிய இருவரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதால் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் உள்ள நிலையில் கடந்த வாரம் ஒரு தமிழ் அரசியல் கைதி பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 9 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒருவாரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.