இரு வார்த்தை பிரயோகங்களால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சர்ச்சை

03 May, 2017 | 04:56 PM
image

(பா.ருத்ரகுமார்)

வித்தைக்காரன், மோசடிக்காரன், போன்றவார்த்தை பிரயோகங்களினால் பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று பிரச்சினை எழுந்திருந்தது. 

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும்  ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளரும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவருமான வசந்த சமரசிங்க பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் சாட்சியமளிக்க வருகைத்தந்திருந்தார்.

எதிர்தரப்பு சட்டத்தரணி மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் எதிர்தரப்பு விசாரணைகள் இடம்பெற்றிருந்தபோது இடையில் மக்களின் பணத்தை பாதுகாக்கும் மத்திய வங்கியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மோசடிக்காரர்களும் வித்தைக்காரர்களும் நாட்டைப்பற்றி யோசிப்பதில்லை என்றும் தன்னால் ஆணைக் குழுவுக்கு அனுப்பட்ட விசாரணை அறிக்கையை  மத்தியவங்கியின் ஆவணங்களுடன் ஒப்பிட்டுபார்க்குமாறும் கேட்டுக்கொண்டார். 

எதிர் தரப்பு சட்டத் தரணிகளான சானக டி. சில்வா, மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மோசடிக்காரர்கள் மற்றும்  வித்தைக்காரர்கள் என கூறுவது ஆணைக் குழுவுக்கு களங்கம் விளைவிக்கும் பொறுத்தமற்ற சொற்கள் எனவும் இவ்வார்த்தைகளை இனிமேல் பாவிக்க இடமளிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய வசந்த சமரசிங்க என்னைப் பொறுத்தவரையில் மத்தியவங்கியில் 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி நடந்த சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்தின் போது மக்களை ஏமாற்றியவர்கள் அனைவருமே மோசடிக்கார்களே அவர்கள்தான் வித்தைக்காரர்கள் எனவும் எனது தனிப்பட்ட கருத்தின்படியேதான் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்கள் குறுக்கிட்டு அவ்வாறு கூறுவது உங்களது தனிப்பட்ட விருப்புக்காகவிருந்தாலும் தனிப்பட்ட வகையில் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த வசந்த சமரசிங்க ஆணைக்குழுவின் தலைவர்கள் மீது வைத்துள்ள மரியாதையின் நிமித்தம் இனிமேல் அவ் வார்த்தைகளை பிரயோகிக்கமாட்டேன் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04