(ஆர்.யசி)

தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் தமது தனிப்பட்ட தேவைக்காகவும் ஆட்சியை கவிழ்க்கும் சூழ்ச்சியை மேற்கொள்ளவும் மக்களின் வாழ்க்கையை சிறைப்பிடிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலான அனைத்து போராட்டங்களையும் எதிர்நோக்க அரசாங்க எந்த நேரமும் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டது. 

எதிர்வரும் 5ம் திகதி  நாடளாவிய ரீதியில் வைத்திய சங்கம் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு செவிமடுக்காத நிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி பாரிய அளவில் வேலை நிறுத்ததை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதில் வழங்கும் வகையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.