இந்­தோ­னே­சி­யாவில் சுல­வெஸி தீவின் வடக்­கே­யுள்ள தலோட் தீவுப் பிராந்­தி­யத்தை 6.4 ரிச்டர் அள­வான பல­மான பூமி­ய­திர்ச்சி செவ்­வாய்க்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது.

மனடோ பிராந்­தி­யத்தின் வட­கி­ழக்கே சுமார் 300 கிலோ­மீற்றர் தொலைவில் இந் தப் பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.

மேற்­படி பூமி­ய­திர்ச்சி தாக்­கிய பிராந்­தி­ய­மா­னது பிலிப்­பைன்­ஸி­லி­ருந்து சுமார் 320 கிலோ­மீற்றர் தொலைவில் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்தப் பூமி­ய­திர்ச்­சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் அறிக் கையிடப்படவில்லை.