அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தொடர்­பான தீர்­மா­னத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொள்­வ­தற்கும் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கும் இருக்­கின்ற உரி­மை­களை பாரா­ளு­மன்­றத்­தினுள் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் நேற்று சபையில் குரல் கொடுத்தார்.

மேற்­படி விவா­தத்தில் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சிக்கு வெறும் 13 நிமி­டங்­களே ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தமது குரல் பாரா­ளு­மன்­றத்­தினுள் முடக்­கப்­ப­டு­வ­தா­கவும் மஹிந்த அணியின் பிர­தா­னி­யான

தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

இது தொடர்­பான விவா­தங்­களின் போதே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மஹிந்த அணி­யி­னரின் உரி­மைக்­காக குரல் கொடுத்து அவர்­க­ளுக்­கான விவாத நேரத்தை அதி­க­ரித்துக் கொடுக்­கு­மாறு பிரதி சபா­நா­ய­கரை வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.30க்கு பிரதி சபா­நா­யகர் திலங்க சுமந்­தி­பால தலை­மையில் கூடி­யது. எதிர்க்­கட்சித் தலை­வரால் விவாதம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. அவ­ரது உரையின் நிறைவில் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய தினேஷ் குண­வர்த்­தன கூறு­கையில்,

இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் விசே­டத்­து­வ­மான விவா­தத்தில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியை சேர்ந்த 51 உறுப்­பி­னர்கள் இருக்­கின்ற போதிலும் எமக்கு வெறும் 13 நிமி­டங்­களே ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நேர­காலம் போது­மா­ன­தாக இல்லை. இதன் மூலம் எமது குரல்­களை முடக்­கு­வ­தற்கும் கழுத்தை நெறிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

இதே­வேளை இந்­நி­லைமை தொடர்ந்து இடம்­பெ­று­வ­தாக உறுப்­பினர் விமல் வீர­வன்­சவும் ஒழுங்குப் பிரச்­சினை எழும்பிக் கூறினார்.

சம்­பந்தன்

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கான நேரம் போதாமை தொடர்பில் எழுந்­தி­ருந்த சர்ச்­சை­க­ளை­ய­டுத்து ஒழுங்குப் பிரச்­சி­னையை எழுப்பி எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் கூறு­கையில்,

இவ்­வி­வா­தத்தில் கலந்து கொண்டு கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான அனைத்து உரி­மை­களும் இங்­குள்ள அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் உள்­ளது.

ஆகவே ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் உரி­மை­களின் படி இவ்­வி­வா­தத்தில் அவர்­க­ளது கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான நேரத்தை ஒதுக்கித் தர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று பிர­தி­ச­பா­நா­ய­கரை வலி­யு­றுத்­தினார்.

மேலும் 60 நிமிடம்  

எதிர்க்­கட்­சிக்கு

இதே­வேளை எழுந்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறு­கையில், விவாதத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதாகவும் அந்த 60 நிமிடங்களையும் எதிர்க்கட்சிக்கு வழங்குவதாகவும் அதனை அனைத்து தரப்பினரும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறினார். இதனையடுத்து எதிர்த்தரப்புக்கு மேலும் 60 நிமிடங்கள் வழங்கப்பட்டன.