யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்­று­முன்­தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி சிந்­தா­மணி பகு­தியில் உள்ள வியா­பார நிலை­ய­மொன்றின் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் நான்கு மோட்டார் சைக்­கிளில் வந்த எட்டு பேரே இத் தாக்­கு­தலை நடாத்­தி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்ட சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

இத் தாக்­குதல் சம்­ப­வத்தின் போது குறித்த வியா­பார நிலை­யத்­திற்கு சென்­றி­ருந்த சத்­தி­ய­தாசன் ராஜ­நேசன் (வயது 24) இளைஞன் காய­ம­டைந்த நிலையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.   தாக்­குதல் சம்­ப­வ­மா­னது குறித்த படு­கா­ய­ம­டைந்த இளை­ஞ­னது வேலைத்­த­லத்தில் ஏற்­பட்ட முரண்­பாட்டின் கார­ண­மா­கவே இவ் இளை­ஞனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

  இந்  நிலையில்  இத் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் மானிப்பாய் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விரிவான விசாரணையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.