கடந்த நான்கு மாதங்­களில், சமூக வலைத் ­த­ளங்­களில் இடம்­பெற்ற முறை­கே­டுகள் தொடர்பில், சுமார் 1,100 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக, இலங்கை கணினி  அவ­ச­ரத்­தயார் நிலைக்­குழு தெரிவித்­துள்ளது.

இது தொடர்பில் அப்­பி­ரிவின் பாது­காப்புப் பொறி­யி­ய­லாளர் ரொஷான் சந்­தி­ர­குப்த தெரி­விக்­கையில்,

 

போலி­யான பேஸ்புக் கணக்­குகள் தொடர்­ பி­லேயே அதி­க­ள­வி­லான முறைப்பா­டு­ கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அதே­நேரம் அனு­ம­தி­யின்றி வேறு நபர்­களின் புகைப்­ப­டங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு முகநூல் கணக்­கு­களை வைத்­தி­ருப்­ப­வர்கள் தொடர்­பிலும் முறை­ப்பா­டுகள் பல கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

2016ஆம் ஆண்டு, போலி­யான பேஸ்புக் கணக்­குகள் தொடர்பில், 2,200 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளமை கவ­னத்தில் கொள்ள வேண்­டிய விட­ய­மாகும் மேலும் இந்த பிரச்­சி­னை­யி­லி­ருந்து பாது ­காப்பு பெற்­றுக்­கொள்­வது முகநூல் பாவ­னை­யா­ளர்­களின்  செயற்­பா­டு­களை பொறு த்தே அமைந்­தி­ருக்கும்.

காரணம் ஒரு­வரி கணக்கில்  தேவைக்கு ஏற்ற அள­வி­லான புகைப்­ப­டங்­களை பயன் ­ப­டுத்­துவதே அவர்­க­ளுக்கு பாது­காப்பாக அமையும் மாறாக அள­விற்கு அதி­க­மான புகைப்படங்களை பயன்படுத்துவது பிரச்சி னைகளையே தோற்றுவிக்கும் எனவும் மேற்படி குழுவின் நிபுணர்கள் சுட்டிக்காட் டியுள்ளனர்.