சிரிய - ஈராக் எல்லைப் பகுதியில் குர்திஷ் தலைமையிலான ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

ஹஸ்ஸாகே மானிலத்தில் ஈராக் மற்றும் சிரிய அகதிகளுக்காக அமைக்கப்பட்ட முகாமைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் பாதுகாப்பு வீரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளபோதும், இது தற்கொலைத் தாக்குதலாக இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.