13 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்ட சுற்றுப் போட்­டியில் நீர்­கொ­ழும்பு அல்-–­ஹிலால் மத்­திய கல்­லூரி அணி சம்­பியன் பட்டம் வென்­றது.

நீர்­கொ­ழும்பு சென். மேரிஸ் கல்­லூரி இந்த கால்­பந்­தாட்ட சுற்றுப் போட்­டியை நடத்­தி­யி­ருந்­தது. 

கடந்த சனிக்­கி­ழமை சென். மேரிஸ் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் சென். நிக்­கலொஸ் கல்­லூரி அணியும் அல்- – ஹிலால் மத்­திய கல்­லூரி அணியும் மோதிக்­கொண்­டன.

இந்த இறுதிப் போட்­டியில்  அல்- – ஹிலால் மத்­திய கல்லூரி அணி வெற்றி பெற்று சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 

13 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான குறித்த சுற்றுப் போட்­டியில் 20 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.