Lanka Property Show2017 கட்டிட மேம்பாட்டாளர்களிடமிருந்து மேலும் தொழிற்துறை சீர்ப்பாடுகளிற்காக அழைப்பு

Published By: Robert

02 May, 2017 | 04:43 PM
image

இலங்கையில் ப்ரொபர்டி நோக்குடைய கண்காட்சியினை ஒருங்கிணைத்ததன் மூலமாக தனது 10வது வருட நிறைவைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியானது ஹில்டன் ரெசிடென்ஸியில் கடந்த மாதம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நவீன ஆடம்பர அடுக்குமனைக் குடியிருப்புக்கள் மற்றும் வில்லாஸ் என்பன அபரிதமாக இடம்பெற்றிருந்ததுடன் புதியசொத்து அறிமுகங்களின் மாதிரி காட்சிகள் என்பனவும் உள்ளடக்கப்பட்டதோடு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தவர்களிற்கு தங்களுடைய சமீபத்திய செயற்றிட்டங்ளை காட்சிப்படுத்திய நாட்டின் மிகச் சிறந்த கட்டிடமேம்பாட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது. இந் நிகழ்ச்சியானது மாசி மாதம் 17ம் திகதி காலை 10 மணிக்கு அமைச்சர்களான அமைச்சர் ரவிகருணா நாயக்க, அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் என்பவர்களின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தனது உரையில் நாட்டின் ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் சொத்து வளர்ச்சி என்பனவற்றை ஊக்குவிக்கும் திட்டத்துடன் இந்த துணிகர முயற்சியை முன்னெடுத்தமைக்கு Lanka Property Webtiy தளத்தை பாராட்டியதுடன் நாட்டின் 30 வீதம் விட அதிகமான பொருளாதாரம் ரியல் எஸ்டேட்துறையின் மூலமான வருமானத்தில் தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.  

இவ் விழாவின் போது ஒரு குழுக் கலந்துரையாடலின் போது முன்னணி சேர்மன்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து முகவர்கள் மற்றும் டெவலப்பர்ஸ்களின் சிறந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகளிற்காக விடுக்கப்பட் டஅழைப்புக்கள் சிறப்பம்சமாக காணப்பட்டது. இலங்கையில் சொத்து கண்காட்சி நிகழ்ச்சிகளின் போது குழு விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்தும் புதிய சிந்தனையானது, இக் குழு விவாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட தொகைக்கும் அதிகமானோர் நிரம்பிக் காணப்பட்டமையினால் துரதிஷ்டவசமாக பலர் திருப்பி அனுப்பப்படவேண்டிய நிலை ஏற்பட்டதன்; மூலமாக இத்துறை தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களிடையே பலத்த கோரிக்கை காணப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டியது. இந்த இரண்டுநாள் நிகழ்ச்சியில் துறைசார் நிபுணர்கள் வணிக மற்றும் குடியிருப்புச் சொத்துச் சந்தையின் எதிர்காலம் மற்றும் கலந்துரையாடுவதற்கு கூடி வந்தமையையும் மெகாடெவலப்மன்ட் செயற்றிட்டங்களானபோர்ட் சிட்டிமற்றும் மெகாபொலிஸ் என்பவற்றின் சமீபத்திய நிலை குறித்து கலந்துரையாடியமையையும் காணக்கூடியதாக இருந்தது.

Lanka Property Webtiy வலைத்தளத்தின் நிர்வாக இயக்குனர் தனது உரையில் அமைச்சர்கள் தங்களது மும்முரமான நேர அட்டவணையின் மத்தியிலும் இந் நிகழ்ச்சியின் அங்குரார்ப்பணத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி கூறியதுடன் இவ்வகை நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள் கலந்து சிறப்பித்தமையை காண்பது நாட்டின் சொத்து துறைக்கு மிகவும் ஊக்குவிப்பாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் இதன் உருவாக்கத்திலிருந்து 10 வருட காலப்பகுதிக்குள் இந்தவலைத் தளமானது விளம்பரங்கள் மற்றும் ஆன்லைன் விஜயங்களின் அடிப்படையில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் இலங்கையில் சொத்துக்களை கண்டறிய, விற்க மற்றும் வாடகைக்கு விட மிகவும் இலகுவான மற்றும் விரைவான தளமாக மாறும்; எனவும் குறிப்பிட்டார்.

கண்காட்சியாளர்கள் மட்டுமல்லாது வருகை தந்திருந்தவர்களும் கண்காட்சியை சுற்றிலும் காணப்பட்ட வாய்ப்புக்கள் குறித்து மகிழ்ச்சியடைந்ததுடன் நிகழ்ச்சியானது முடிவடைந்த விற்பனைகள் மற்றும் ஆடம்பர மற்றும் கட்டுப்படியான தொகுதிகளிற்கான பல இட ஒதுக்கீடுகள் என்பவற்றுடன் முடிவிற்கு வந்தது. இந்த இரண்டுநாள் நிகழ்ச்சியின் போது பல்வேறுபட்ட அமைப்புக்களின் தலைவர்கள், இயக்குனர்கள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் என்பனர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டமை குறித்து கண்காட்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந் நிகழ்ச்சியானது 5 அடுக்கு மாடி விற்பனைகளையும் நூற்றுக்கணக்கான இட ஒதுக்கீடுகளையும் அவை வெகுவிரைவில் விற்பனையாகும் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று வரை நாட்டில் நடைபெற்ற சொத்து கண்காட்சி நிகழ்ச்சிகளின் கட்டிட விற்பனைகள் மற்றும் இடஒதுக்கீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில் இந்தநிகழ்ச்சியில் அவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாககாணப்பட்டது.

இந் நிகழ்ச்சியானது நாட்டில் மிகவேகமாக வளர்ந்துவரும் இத்துறையில் முதலீட்டு ஆற்றலுடைய முதலீட்டாளர்களை சந்திக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை கண்காட்சியாளர்களிற்கு வழங்கியதனால் கண்காட்சியாளர்கள் மாத்திரமன்றி வருகை தந்திருந்தவர்களிடமிருந்தும் ஒரே விதசாதகமான பல எண்ணிக்கையிலான கருத்துக்களை Lanka Property Web பெற்றுக் கொண்டது. சுகல கண்காட்சியாளர்களும் எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்ததான ஆர்வத்தை வெளியிட்டதுடன், கிடைத்த இந்த முதல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆதரவு தெரிவிக்கும் இத்தகையிலான நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நாடாத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக Lanka Property Web உறுதியளித்தது.

இந் நிகழ்ச்சி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள Lanka Property Webஅவர்களது 011 4321348 எனும் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவோ அல்லது www.lankapropertyweb.com/events எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்வதன் மூலமாகவோ தொடர்புகொள்ளுக.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58