கடனைத் திருப்பித் தராதவர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர்

Published By: Devika

02 May, 2017 | 01:33 PM
image

பட்டப்பகலில் பாதசாரியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காரை ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மும்பை, தானே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ரமேஷ் என்ற அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அத்துல் என்பவருக்கு மூன்று இலட்சம் ரூபாய்களை கடனாக வழங்கியிருந்தார். அதை குறித்த காலத்துக்குள் அத்துல் திருப்பித் தரவில்லை.

இதனால் கோபமடைந்த ரமேஷ், அத்துல் மீது பட்டப்பகலில் காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்தார். இதன்போது, மோதுவதில் இருந்து தப்பிப்பதற்காக அத்துல் ரமேஷின் காரின் மீது ஏறிக்கொண்டார். சில அடி தூரம் காரின் மீது வைத்தே இழுத்துச் செல்லப்பட்ட அத்துல், தெய்வாதீனமாக எதுவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்தார்.

இச்சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52