ஹம்பாந்தோட்டை, ஹுன்கம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

72 வயதுடைய தாயொருவரும் அவரது 32 வயதுடைய மகளொருவருமே குறித்த வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.