Benign Prostatic Hyperplasia என்பது 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் ஒரு உடலியல் சிக்கல். அதாவது அவர்களின் பாலுறவு சுரப்பி என்று சிறப்பித்து அழைக்கப்படும் புரோஸ்டேட் சுரப்பி முதுமையின் காரணமாக வீக்கமடைவதற்கு தான் benign prostatic hyperplasia என்று பெயர்.

பகலில் சிறுநீர் கழிப்பது குறைந்து இரவில் அதிகளவில் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் சிறுக சிறுக பிரிவது, சிறுநீர் கழித்துக் கொண்டேயிருக்கும் போது திடீரென்று இடையில் தடைஏற்பட்டு பின் வருவது, சிறுநீர் வருவது போல் இருக்கும். கழிப்பறைக்கு சென்றால் சிறுநீர் பிரியத் தொடங்கும் முன்  நீண்ட நேரம் எடுப்பது, இரவில் சிறுநீர் கழித்த பின்னரும் மீண்டும் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்குதல், ஒரு சிலருக்கு சிறுநீர் பிரியும் போது இறுதியில் துளி துளியாக வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு benign prostatic hyperplasia என்ற பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு.

இதற்காக பயப்படத்தேவையில்லை. ஆனால் உடனடியாக DRE , அல்ட்ரா சவுண்ட் மற்றும் P S A ஆகிய பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும். தொடக்க நிலையில் இருந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திடலாம். சற்று பாதிப்பு அதிகரித்திருந்தால் இதற்கென இருக்கும் பிரத்யேக சத்திர சிகிச்சையை செய்து கொண்டால் குணமடையலாம். 

ஒருசிலருக்கு மட்டுமே இத்தகைய வீக்கம் கட்டியாக மாறி அவை புற்றுநோயாக மாறக்கூடும். அத்துடன் அவர்களுக்கான அறிகுறிகளும் மாறுபடலாம். அவர்களுக்கு ‘திசுப்பரிசோதனை ’ செய்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் குணமடையலாம்.

இருப்பினும் ஐம்பது வயதைக்கடந்த அனைத்து ஆண்களும் ஆண்டுக்கொரு முறை P S A  என்ற பரிசோதனையை மேற்கொண்டு தங்களின் புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாட்டினை கண்காணிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Dr.சங்கர்

தொகுப்பு அனுஷா.