ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆதரவாளர்கள் இருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசியவைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே மரணத்தை எதிர்நோக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருவரினதும் சடலங்கள் தற்போது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகளின் பின்னர் எவ்வாறு மரணம் சம்பவித்தது என உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அதிகளவு சன நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாகவே இவர்கள் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.