இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட்

Published By: Priyatharshan

01 May, 2017 | 11:03 AM
image

இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்­பந்து வீச்சு பயிற்சியாளராக தென்­னா­பி­ரிக்க அணியின் முன்னாள் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான அலன் டொனால்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த அறி­வித்­தலை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­வித்­தது.

எதிர்­வரும் ஜுன் மாதம் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோ­ச­க­ராக செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது 50 வய­தா­கும் அலன் டொனால்ட் தென்­னா­பி­ரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் அறி­மு­க­மா­னார். 12 வரு­டங்கள் கிரிக்கெட் அரங்கில் கோலோச்­சிய அலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 330 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார். இதில் 3 முறை பத்து விக்­கெட்­டுக்கள் வீதமும் 20 முறை ஐந்து விக்­கெட்­டுக்கள் வீதமும் அலன் டொனால்ட் வீழ்த்­தி­யுள்ளார்.

164 ஒருநாள் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள டொனால்ட் 272 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார். இதில் இரண்டு முறை 5 விக்­கெட்­டுக்கள் வீதமும்இ 11 முறை நான்கு விக்­கெட்­டுக்கள் வீதமும் வீழ்த்­தி­யுள்ளார்.

கடை­சி­யாக 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்­ணத்­தின்­போது தென்­னா­பி­ரிக்க அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­க­ரா­கவும் அவர் செயற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு அலன் டொனால்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடை­பெ­ற­வுள்ள இங்­கி­லாந்து மைதா­னங்கள் வேகப்­பந்து வீச்­சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­காக இங்­கி­லாந்து செல்லும் இலங்கை ஒரு நாள் அணியில் 2 வரு­டங்­க­ளுக்குப் பிறகு லசித் மலிங்க சேர்க்கப்பட்டுள்ளமை

குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21