சிறப்­பான எதிர்­கா­ல­மொன்­றிற்­காக உரை­யாடல் ரீதி­யான, இணக்­கப்­பாடு மிக்க பணி­யினை மேற்­கொள்ள இம்­முறை மே தினத்தை சந்­தர்ப்­ப­மாக மாற்றிக் கொள்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் வெளி­யிட்­டுள்ள மே தினச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

வேலை செய்யும் மக்­களின் வியர்வை மற்றும் உழைப்பின் மீதே முழு உல­கமும் தங்­கி­யுள்­ளது. வர­லாறு முழு­வதும் அவர்கள் தமது உரி­மை­க­ளுக்­காக மேற்­கொண்ட தொடர்ச்­சி­யான போராட்டம் மற்றும் அர்ப்­ப­ணிப்பின் விளை­வாக உலகின் கவ­னத்தை தொழி­லாளர் மீது ஈர்க்கும் வகையில் சர்­வ­தேச ரீதி­யாக மே தினத்தைக் கொண்­டா­டு­வது ஆரம்­பா­கி­யது.

தற்­கா­லத்தில் உழைக்கும் மக்கள் என்­பது மிகவும் பரந்த அர்த்­தத்­தினைக் கொண்­டுள்­ளது. அது தொடர்ந்தும் தொழிற்­சா­லையில், பண்­ணையில் உழைப்­பினை சிந்தும் ஓர் குழு­வி­ன­ருடன் மாத்­திரம் வரை­ய­றுக்­கப்­ப­டு­வ­தில்லை. நவீன தொழில்­நுட்ப உலகில் மனித ஊழி­யத்­துக்கு பரந்­த­ள­வான பல சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கி­யுள்­ள­துடன் அதற்­க­மை­வாக வேலை செய்யும் மக்கள் எதிர்­நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்­சி­னை­களும் நாளுக்கு நாள் மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றன.

சம்­பி­ர­தாய மே தினக் கொண்­டாட்­டத்­துடன் மாத்­திரம் சுருங்கி விடாது இந்த நவீன போக்­குகள் மற்றும் சவால்­களை இனங்­கண்டு வேலை செய்யும் மக்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்­கவும்இ அவர்­க­ளது நலன்கள் தொடர்­பாக நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­ளவும் அரச மற்றும் தனியார் துறைகள் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ளவும்  விரி­வான வேலைத்­திட்­ட­மொன்றைத் தயா­ரித்தல் என்­பன அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

நவீன தொழி­நுட்ப உலகில் புதிய சமூக, அர­சியல் சவால்­க­ளுக்கு மத்­தியில் தொழி­லா­ளர்­க­ளுக்குரிய கௌரவம் கிடைக்கக் கூடிய, தேசத்தின் முன்­னேற்­றத்­திற்­காகத் தமது பணியை ஆற்­று­வ­தற்குத் தேவை­யான பின்­புலம் உரு­வா­கின்ற, அவர்களது உழைப்புக்குரிய பெறுமானம் கிடைக்கும் சிறப்பான எதிர்காலமொன்றிற்காக உரையாடல் ரீதியான, இணக்கப்பாடு மிக்க பணியினை மேற்கொள்ள இம்முறை மே தினத்தை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.