தொழி­லா­ளர்கள் பொறுப்­பு­மிக்க சமூக சக்­தி­யாக செயற்­ப­ட­வேண்டும் : ஜனாதிபதி

Published By: Priyatharshan

01 May, 2017 | 10:34 AM
image

மே தினத்தைக் கொண்­டாடும் உல­கவாழ் தொழி­லா­ளர்­க­ளோடு நானும் இணைந்து கொள்­வ­தோடு, மனித சமூ­கத்தின் சுதந்­தி­ரத்­திற்­கா­க வும் தொழி­லாளர் வர்க்­கத்தின் உரி­மை­க­ளுக்­கா­க வும் தமது வியர்­வையையும், கண்­ணீ­ரையும் சிந்தி போரா­டிய, குரல் கொடுத்த, உயிர் தியாகம் செய்த அனைத்து தொழி­லாளர் சகோ­த­ரர்­க­ளுக்கும் எனது கௌர­வ­மான வணக்­கத்தை தெரி­வித்துக் கொள்­கிறேன் என்று இன்று கொண்­டா­டப்­படும் மேதி­னத்தை முன்­னிட்டு  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அந்த செய்­தியில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

மனித உழைப்­பினால் உரு­வாக்­கப்­பட்ட மேற்­கட்­டு­மா­ன­மா­னதுஇ மனித உழைப்பின் பெரு­மை­மிக்க உன்­னத தன்மை முன் மண்­டி­யிட்ட வர­லாற்று ரீதி­யான நிகழ்வை நினை­வு­கூரும் முக­மாக கொண்­டா­டப்­படும் சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு மே தினத்தைக் கொண்­டாடும் உல­கவாழ் சகோ­தர தொழி­லாளர் சமூ­கத்­திற்கு மரி­யாதை செலுத்­தியே இந்த செய்­தியை வெளி­யி­டு­கிறேன். 

மக்­களை சங்­கி­லி­களால் பிணைத்துஇ அவர்­களை தமது உட­மை­யாகக் கருதி முத­லா­ளித்­துவ வர்க்­கத்­தினர் செயற்­பட்ட காலம் முதல் தொழி­லாளர் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக ஒரே மேசையில் அமர்ந்து முத­லாளி வர்க்­கத்­துடன் பேரம் பேசக்­கூ­டிய தற்­போ­தைய காலம் வரை தொழி­லா­ளர்கள் கடந்து வந்த பாதை­யா­னது அவர்கள் சிந்­திய இரத்­தத்­தி­னாலும் வியர்­வை­யி­னாலும்இ கண்­ணீ­ராலும் உரு­வாக்­கப்­பட்­டது என்­பதை சர்­வ­தேச தொழி­லாளர் தினம் எமக்கு நினை­வூட்­டு­கி­றது. 

எஸ்.டபி­ளியூ.ஆர்.டீ.பண்­டா­ர­நா­யக்க வினால்  மே தினம் விடு­முறை தின­மாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டது  முதல் இலங்கை வாழ் தொழி­லாளர் சமூ­கத்­திற்கும் தாம் வென்­றெ­டுத்த வெற்­றி­களை சீர்­தி­ருத்­திப்­பார்க்க கிடைக்கும் வாய்ப்­பா­கவே அமை­கின்­றது எனலாம். 

இத்­த­கைய நீண்­ட­கால போராட்டப் பாதையில் புடம்­போ­டப்­பட்டு, நவீன ஜன­நா­யக சமூகக் கட்­ட­மைப்­பிலும் முக்­கி­ய­மான சக்­தி­யாக செயற்­படும் தொழி­லாளர் வர்க்கம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்­டத்­திலும் முக்­கிய பங்­கினை வகித்­தது என்­ப­தையும் நினைவு கூர விரும்­பு­கிறேன். 

நாட்­டில்­நல்­லி­ணக்­கத்­தை­ஏற்­ப­டுத்தல், பொரு­ளா­தா­ர­சு­பீட்­சத்­தை­அ­டை­தல்­உள்­ளிட்­ட­நா­டு­எ­திர்­நோக்­கி­யி­ருக்­கும்­ச­வால்­க­ளை­வெற்­றி­கொள்­ளும்­செ­யற்­பா­டு­க­ளி­லும்­தொ­ழி­லா­ளர்­ச­மூ­கத்­தின்­மீ­து­சு­மத்­தப்­பட்­டுள்­ள­பொ­றுப்­பு­கை­வி­ட­மு­டி­யா­த­தாகும். 

தொழி­லா­ளர்கள் தமது உரி­மை­க­ளையும், வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் மேலும் பலப்­ப­டுத்­திக்­கொள்ளும் அதே சமயம், நாட்டின் ஒட்டு மொத்த பொரு­ளா­தார செயன்­முறை மற்றும் உலகின் புதிய போக்கு ஆகி­ய­வற்­றையும் அறிந்து, தெரிந்து, பொறுப்­பு­மிக்­க­தொரு சமூக சக்­தி­யாக செயற்­ப­டு­வார்கள் என நான் நம்­பு­கிறேன். 

1917 ஆம் ஆண்டு நிகழ்ந்த உன்­னத ரஷ்ய புரட்­சியின் வெற்­றி­க­ர­மான நூற்­றாண்டு பூர்த்­தி­ய­டையும் இவ்­வாண்டில் கொண்­டா­டப்­படும் மே தின­மா­னது, பல­மான உந்து சக்­தியை எம் அனை­வ­ருக்கும் பெற்றுக் கொடுத்­துள்­ளது. அந்த உற்சாகத்துடன் இன்று மே தினத்தைக் கொண்டாடும் உலகவாழ் தொழிலாளர்களோடு நானும் இணைந்து கொள்வதோடு, மனித சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் தமது வியர்வையும், கண்ணீரையும் சிந்தி போராடிய, குரல் கொடுத்தஇ உயிர் தியாகம் செய்த அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் எனது கௌரவமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54