மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளுக்கும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனக்கும்  இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள்,

இந்த சந்திப்பின் போது தங்களது பிரச்சனைகள் ஆக்கபூர்வமான முறையில் அவர்களிடம் எடுத்து செல்லப்படவில்லை என இந்த கலந்துரையாடலின் மூலம் தெரியவந்துள்ளது .

இன்றய (நேற்றைய) தினம் எங்களது போராட்டம் 69  நாள் என்பதையும் எங்களுடைய தொழில் உரிமையின் தேவைப்பாடு சம்பந்தமாகவும் தெளிவு படுத்தியுள்ளோம் 

அதற்கு அவர் இரண்டு வாரங்களில் ஒரு சாதகமான முடிவினை பெற்று தருவோம் என்ற வாக்குறுதியினை வழங்கியிருக்கின்றார். ஆகவே எதிர்க்கட் சி தலைவரின் வாக்குறுதி எமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் சுமந்திரன் , மாவை சேனாதிராஜா, துரைராஜா சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது