எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஒருபோதும் ஏற்க மாட்டோம் : சம்பந்தன்

Published By: MD.Lucias

30 Apr, 2017 | 11:06 PM
image

தேசிய பிரச்சினைக்கான தீர்வு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம், எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். அது உறுதியானதாகும் என  எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது  ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியவர் நாங்கள் அனைத்து தரப்பினரையும் அனுசரித்துச்செல்கின்றோம். அதற்காக அடிப்படை விடயங்களை பிடி கொடுக்குமளவிற்கு நடந்துகெர்ள்ளவில்லை என்றார். 

தந்தை செவ்வாவின் 40ஆவது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்;ட எதிர்க்கட்சித்தலைவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

பல இனங்களைச் சோர்ந்த மக்கள் வாழ்கின்ற நாடுகளில் ஆட்சி ஒழுங்குகள் அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். தந்தை செல்வா 1947 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்நாட்டின் அரசியல் ஆட்சிமுறை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அந்த வாதத்தினை முன்வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து ஒரு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணம் இன்றும் தொடர்கின்றது. அந்தவிதத்தில் தான் நாங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குத் தேவை எமது மக்களின் ஒற்றுமையாகும். எமது மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்கவேண்டும் இதற்கு நாங்கள் ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். நேற்று சனிக்கிழமை  நடைபெற்ற தமிழரசுக் கூட்டத்தில் இவ்விடையங்கள் தொடர்பில் மிகவும் தெளிவாக பேசினோம்.

கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்போது பகைமையை வளர்க்காமல்,  அனைவரினதும் ஆதரவுகளைப் பெற்று இந்நாட்டிலுள்ள மக்களும் அதனை ஆதரிக்கக் கூடிய வகையில், நிதானமாக நீண்ட நோக்குடன் சர்வதேசத்தில் தடம் பதிக்கக் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விடையமல்ல, நடைமுறைச் சாத்தியமற்ற விடையமுமல்ல. 

எம்முடைய அரசியல் சூழலில் அதனை அடையக் கூடிய நிலமை இருக்கின்றது. அதற்காக நாங்கள் அனைவரினதும் அதரவுகளைப் பெற்றுச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் பிடி கொடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்ளவும் கூடாது.

எமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம், ஏற்கவும் முடியாது, ஏற்கப் போவதுமில்லை, அது உறுதி. தீர்வு ஸ்த்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம், மக்களின் ஆலோசனைகளை நாம் பெறுவோம். மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் நாங்கள் இறுதி முடிவெடுப்போம். இந்நிலையில் ஏற்பட்டுள்ள வாய்ப்பை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட வாய்ப்பு இதற்குப் பின்னர் வரும் என நாங்கள் எதிர் பார்க்க முடியாது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50