தேவை இருந்திருப்பின் ஒரே இரவில்  கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் : பொன்சேகா

30 Apr, 2017 | 07:36 PM
image

(க.கமலநாதன்)

எனக்கு தேவை இருந்திருந்தால் கடந்த காலத்தில் எனது வசமிருந்த அதிகாரங்களை கொண்டு கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்போது எனக்கு புதியதொரு பதவி வழங்கப்பட்டு அதனால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பங்கம் ஏற்படுவதை அமைச்சர் ஜோன் செனவிரத்ன விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேலியகொடை, பராக்கிரம மாவத்தையில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகளின் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு தேவை இருந்திருந்தால் கடந்த காலத்தில் என்வசம் இருந்த அதிகாரங்களை கொண்டு ஒரே இரவில் கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன். அவ்வாறு ஒழுக்ககேடாக நடந்துக்கொள்ள வேண்டியதொரு அவசியப்பாடு அன்று எனக்கு இருக்கவில்லை.

அதேநேரம் கடந்த அமைச்சரவை சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு பாதுகாப்பு தரப்பு சார்ந்த விசேட பதவியொன்றை தருவதாக கூறியது நகைச்சுவையாக கூறிய விடயம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அமைச்சர் என்ற வகையில் எஸ்.பி. திஸாநாயக்க மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இருப்பினும் அவர் சகல விடயங்களையும் நகைப்பாக எடுத்துக்கொள்கிறார்.  எவ்வாறாயினும் மனிதர்கள் என்று வருகின்ற போது வாழ்க்கையில் ஒரு முறையாவது சிந்தித்து செயலாற்றியிருக்க வேண்டும்.

அதேபோல் தற்போது அமைச்சர் ஜோன் செனவிரத்ன தனது அமைச்சுப்பதவி குறித்து அச்சத்தில் உள்ளார்.  காரணம் அவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பக்கச்சார்பானவர்.

ஆகவே புதியதொரு பதவி வழங்கப்படுகின்ற போது அதனால் கோத்தபாய ராஜபக்சவிற்கு பங்கம் ஏற்படுவதை அமைச்சர் ஜோன் செனவிரதன விரும்பமாட்டார்.

எவ்வாறாயின் மேற்படி அமைச்சர்கள் கூறுகின்ற விடயங்களை கருத்திற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தாகும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58