குழந்தைகைளைப் பாதிக்கும் ஹேண்ட் புட் மவுத் டிஸீஸ்

Published By: Robert

30 Apr, 2017 | 12:46 PM
image

ஒரு சில பிள்ளைகள் பாடசாலைகளிலிருந்து திரும்பியவுடனோ அல்லது காலையில் எழுந்திருக்கும் போதோ அவர்களின் உடலில் இயல்பை விட அதிகமான உஷ்ணம் இருக்கிறது என்றாலோ அல்லது உடலில் சில பகுதிகளில் கொப்புளங்கள் வந்திருக்கிறது என்றாலோ அதனை உடனடியாக அம்மை என்ற எண்ணத்திற்கு வந்துவிடாதீர்கள். ஏனெனில் தற்போது hand foot mouth disease என்ற நோயால் சிறார்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

Hand foot mouth disease இது ஒரு தொற்று நோய். விரைவாகப் பரவக்கூடியது. ஏராளமான பிள்ளைகளுடன் வகுப்பறையில் இருக்கும் போது பாதித்த பிள்ளையிடமிருந்து இது வந்திருக்கும். இது பாதித்தவுடன் உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் வியர்க்குரு போன்ற நீர் கோர்த்த கொப்புளங்கள் வரலாம். ஒரு சில குழந்தைகளுக்கு 100டிகிரிக்கு மேல் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல் வரலாம். தொண்டை வறண்டு போகலாம்.

இதற்கு வைரஸ் தொற்றிற்காக அளிக்கப்படும் சிகிச்சை வழங்கப்படுகிறது. 5 முதல் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும். பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமைப்படுத்தி சுகாதாரமான சூழலில் வைத்திருந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும். ஆனால் அம்மை என்று எண்ணி சிகிச்சைப் பெறாமல் இருந்துவிடாதீர்கள்.

Dr. ஜெ. சங்கர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29