நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை பொருளாதார ரீதியில் பாதுகாத்து கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. அதனை அடிப்படையாகக்கொண்டு நீர் கட்டணத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இருபதாயிரத்து இருநூற்று ஏழு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொல்கஹவெல, பொத்துஹெர மற்றும் அளவ்வ ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் பொத்துஹெர பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார்.