வாகன பேரணியில் சென்ற சிலரின் தாக்குதலுக்கு இலக்காகிய டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டிக்கோயாவிலிருந்து கொழும்பு நோக்கி காரில்  செல்கையிலே டிக்கோயா நகர் பகுதியில் இவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார் 

ஹட்டன் நகரிலுள்ள இரண்டு  பிரபல பாடசாலைகளின் நட்பு ரீதியான மாபெரும் கிரிகெட் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற வாகன பவனியில் சென்றவர்களே இவ்வாறு தாக்கியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று காலை 10.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து காரில் கொழும்பு நோக்கி பயணித்த போது வாகனப் பவனியில் வந்த சிலர் வைத்தியரின் காரை தட்டியதாகவும் இதன் பின்னணியில் வைத்தியர் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் தெரியவருகின்றது. 

வைத்தியரின் முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பில்  ஹட்டன் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலுக்கு இலக்காகிய வைத்தியர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.